ஒரு களம் மூன்று கதை!



‘வடகறி’ படத்தைத் தொடர்ந்து ஸ்வாதி நடிக்கும் படம் ‘லவ் பண்ணுங்க லைப் நல்லா இருக்கும்’. ‘அறிந்தும் அறியாமலும்’ நவ்தீப் இதன் நாயகன். வசனம் பாலா.ஆர். பாடல்கள் நா.முத்துக்குமார், சினேகன். இசை மகேஷ் ஷங்கர்.

ஒரு களம் மூன்று கதை என்கிற பாணியில் அமைந்திருக்கும் இதன்  திரைக்கதைதான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்கிறது படக்குழு. ‘வாடா மச்சி கில்லாடி...’ என்ற பாடலை கானா பாலா எழுதி பாடியிருக்கிறாராம்.

‘‘தமிழ் சினிமாவில் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் எனக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. அதை தக்கவைக்கும் விதமாக இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். அழுத்தமான கதையாக இருந்தாலும் சரி, லைட் வெயிட் கதையாக இருந்தாலும் சரி, ஒரு கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை முக்கியம்.

 அந்த வகையில் இது சின்ன கதை. ஆனால் விறுவிறுப் புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை இருக்கும். ஹீரோவுக்கு இணையாக இதில் ஸ்வாதிக்கும் முக்கியத்துவம் இருக்கும். இருவருக்குமான ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருக்கும்” என்கிறார் நவ்தீப்.

- எஸ்