லவ்வுதான் ஆனா லவ்வு இல்ல!



‘கடவுள் பாதி மிருகம் பாதி’ படத்தில் தன்னுடன் நடித்த ராஜ் என்பவரை காதலிப்பதாகவும், அவரையே ரகசிய திருமணம் செய்துவிட்டதாகவும் வந்த தகவலை அடியோடு மறுத்திருக்கிறார் பூஜா. ‘நானும் அவனும் பதினாறு வருஷமா நண்பர்கள்.

பெங்களூர்ல அடுத்தடுத்த காலேஜ்ல படிச்சோம். அப்ப அவன் மேல் எனக்கும், என் மேல் அவனுக்கும் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது நிஜம். ஆனா, அதை காதல்னு சொல்ல முடியாது’ என்று வெளிப்படையாகப் பேசிய அவர்,  நெருங்கிய நண்பனாக இருந்தாலும், படத்துக்கு சம்பளம் வாங்கிக்கொண்டுதான் நடித்தாராம்.

அதிக வளர்த்தியாக இருப்பதாகவும், சமீபகாலமாக உடல் எடை அதிகரித்துவிட்டது என்றும் லட்சுமி மேனன் குறித்து தொழில் போட்டியாளர்கள் கிளப்பிவிடுகிறார்களாம். ‘எனது எடை 48 கிலோ. உயரம் 5 அடி 3 அங்குலம். சந்தேகம் இருப்பவர்கள் வந்து அளந்து பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற ரேஞ்சில் புலம்புகிறார் லட்சுமி மேனன்.

கடந்த ஜனவரி மாதம் அனன்யாவும், அவரது காதல் கணவர் ஆஞ்சநேயனும் தேனிலவுப் பயணமாக (இவ்வளவு லேட்டாகவா?) கென்யா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால், அந்த மாதத்தில் ‘அதிதி’ படத்தின் ஷூட்டிங் இருந்ததால், கென்யா டிரிப்பை கேன்சல் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டாராம் அனன்யா. பிறகு ‘அதிதி’ படக் கம்பெனியில் புகார் செய்து, இரண்டரை லட்ச ரூபாய் நஷ்ட ஈடாகப் பெற்றாராம். இதை எப்படி தவறென்று சொல்கிறார்கள் என்று, அப்பாவி மாதிரி கேட்கிறார் அனன்யா.

-தேவராஜ்