அனுஷ்காவுக்கு அதிர்ஷ்டம் அடிக்குது!



எப்படியாவது சிரஞ்சீவியின் 150வது படத்தில் ஹீரோயினாக நடித்துவிட வேண்டும் என்பதில் டோலிவுட் ஹீரோயின்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் அனுஷ்காவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும், பரிசீலனைப் பட்டியலில் அவரது பெயர்தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இன்னும் சிரஞ்சீவியின் படத்துக்கு கதையே கிடைக்கவில்லை. அதற்குள் என்னய்யா கதை விடுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

சுனேனாவுக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ‘நீர்ப்பறவை’ ரிலீசான பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்பி ஏமாந்துவிட்டார். எனவே, தன் பாணியை தடாலென்று மாற்றிக்கொண்ட அவர், கிருஷ்ணா ஜோடியாக நடித்து வரும் ‘வன்மம்’ படத்தில், குளத்தில் குளிக்கும் ஒரு காட்சியில் கிளுகிளுப்பாக நடித்துள்ளார். நெருக்கமான காதல் காட்சிகளிலும் அம்மணி புகுந்து விளையாடியுள்ளாராம். ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்துள்ள ‘நம்பியார்’ படத்தையும் பெரிதாக எதிர்பார்க்கிறார்.

- தேவா