ப்ரியாவிடம் சிக்கிய 1 லட்சம்!



ப்ரியா ஆனந்தை நழுவ விட்டு விட்டதாக மேடைகளில் புலம்புகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். என்ன நடந்தது? விஜய்யை வைத்து ‘துப்பாக்கி’ படத்தை இயக்க ஆயத்தமான போது, ஹீரோயினாக பிரியா ஆனந்தை ஒப்பந்தம் செய்து, அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பிரியா, முருகதாஸை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் கடுப்பான முருகதாஸ், உடனே காஜல் அகர்வாலை விஜய்க்கு ஜோடியாக்கி விட்டார். என்றாலும், இதை சினிமா விழாக்களில் அடிக்கடி சொல்லும் முருகதாஸ், ‘என் அடுத்த படத்துல கண்டிப்பா பிரியாவை நடிக்க வைப்பேன்’ என்கிறார். திருமணத்துக்குப் பிறகு கணவர் விஜய்யின் விளம்பரக் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார் அமலா பால்.

- தேவா