காதல் பயிற்சி தரும் ஹன்சிகா!



‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா நடிக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பெட் ரூம் ஸ்டில்ஸ்தான் இப்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டாக். பரபரப்புக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் அப்பாவியாக பேசுகிறார் இயக்குநர் லஷ்மண். இவர் எஸ்.ஜே.சூர்யாவிடம் சினிமா பயின்றவர்.

“இது முழுமையான காதல் கதை. ஜிம் கோச்சாக ஜெயம் ரவி வர்றார். ஆனால் அவருக்கு காதல் சொல்லிக் கொடுக்கும் கோச்சாக ஹன்சிகா வர்றார். பாய் நெக்ஸ்ட் டோர் எனுமளவுக்கு ஜெயம் ரவியின் ரோல் யதார்த்தமாக இருக்கும். சமீப காலமாக சீரியஸ் வேடங்களில் நடித்துவந்த அவர், இதில் லவ்வர் பாயாக கலக்கியுள்ளார். அதேபோல் அவருடைய படங்களில் இதுதான் அதிக செலவில் உருவாகிறது.

 இந்தப் படத்துக்காக நிறைய செட் போட்டுள்ளோம். அந்த வகையில் சமீபத்தில் மிகப் பெரிய தியேட்டரை வாடகைக்கு எடுத்து படமாக்கினோம். அந்தக் காட்சியில் ஜூனியர் ஆர்டிஸ்ட் சுமார் 1200 பேர் நடித்துள்ளார்கள்.

இதேபோல பிரம்மாண்டம் படம் முழுக்க இருக்கும். அதுக்கு முழுக் காரணமாக இருந்தவர் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால். இந்த ஆண்டின் மிகச் சிறந்த மெலடி எனுமளவுக்கு இமான் அட்டகாசமான பாடல்களைக் கொடுத்துள்ளார்.  இப்போது நீங்கள் பார்த்த ஸ்டில்ஸ் சாம்பிள்தான். இதைவிட ஸ்பெஷல் அட்ராக்ஷன் படத்துல நிறைய உண்டு” என்கிறார்
லஷ்மண்.  

-சுரேஷ்ராஜா