செருப்பை தூக்கும் பிபாஷா!



ஜோடியாக நடிக்கும் ஹீரோக்கள் நெருங்கி வரும்போது ஜாக்கிரதையாக இரு, காதலில் விழாதே என இலியானாவுக்கு அட்வைஸ¢ செய்திருக்கிறார் மாஜி ஹீரோயின் ரேகா. ஷூட்டிங் இல்லாதபோது பிரியங்கா சோப்ராவின் வீடே கதி என கிடக்கிறாராம் சல்மான் கான். இருவரின் நெருக்கம் பற்றித்தான் இப்போது கிசு கிசு பரவியுள்ளது. பொதுஇடத்தில் நக்மாவிடம் நடந்ததுபோல் யாராவது தவறாக என்னிடம் நடந்தால் செருப்பாலேயே அடிப்பேன் என்கிறார் பிபாஷா பாசு.

வயதாகிவிட்டதால் ஆடை குறைத்து நடித்தாலும் யாரும் பார்க்க மாட்டார்கள். அதனால் அக்கா, அண்ணி வேடங்களிலேயே இனி நடிப்பேன். இப்படிச் சொல்பவர் பிரீத்தி ஜிந்தா.
யோகா, ஸ்விம்மிங் இதுதான் இப்போது அனுஷ்கா வின் லேட்டஸ்ட் ஹாபி. அவரை இதற்கு பழக்கப்படுத்தியவர் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி.

கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த கேத்ரினா, ரன்பீர் ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளது. சமீபத்தில் ஹாலிடே கொண்டாட கோவாவுக்கு இந்த ஜோடி பறந்திருக்கிறது.
35 வயதாகிவிட்டது. திருமணம் செய்யும் ஆசை இன்னும் வரவில்லை. திருமணத்தை விட லிவிங் டுகெதர்தான் பிடிக்கும் என மனம் திறந்து சொல்லியிருக¢கிறார் நேஹா தூபியா.
ஹாலிவுட்டில் நடித்த இர்பான் கானிடம் தனக்கும் ஹாலிவுட் வாய்ப¢ பைப் பெற்றுத் தருமாறு நச¢சரித்து வருகிறாராம் மல்லிகா ஷெராவத்.

-ஜியா