பிரியங்காவின் இசை ஆசை



நாடு முழுவதும் வினியோக உரிமை, சாட்டிலைட், ஆடியோ, இன்டர்நெட், டிவிடி உரிமம் என அனைத்தும் சேர்த்து இப்போதே ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’. ‘கோச்சடையான்’ இந்தி பாடல் வெளியீட்டு விழாவுக்கு தனது அம்மாவுடன் வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். சினிமா விழாவுக்கு தனது அம்மாவுடன் அவர் வந்தது இதுவே முதல் முறை. ரஜினி மீதுள்ள மரியாதை காரணமாகவே அம்மாவையும் அழைத்து வந்ததாகக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

காமெடியன் கபில் சர்மாவின் டிவி ஷோவில் பங்கேற்ற அமிதாப் பச்சன், நிகழ்ச்சியிலிருந்து கோபித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினார். அமிதாப்பை ஓவராக கிண்டல் செய்ததால் அப்செட் ஆகி அவர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. ‘அப்பாதான் உலகம் என இருந்தேன். அவர் இல்லாமல் துவண்ட எனக்கு இசைதான் ஆறுதல் தருகிறது’ என இசை ஆல்பங்களை தயாரித்து வரும் பிரியங்கா சோப்ரா சொல்கிறார். திருமணம் செய்யும் எண்ணம் போய்விட்டதாகவும் கூறியுள்ளார்.

நீரஜ் பாண்டே இயக்கும் காலிப் தி கேங்லீடர் படத்தில் நடிக¢க வந்த வாய்ப்பை அஜய் தேவ்கன் மறுத்துவிட்டார். கால்ஷீட் பிரச்னை இதற்குக் காரணமாம். Ôமை தேரா ஹீரோÕ பம்பர் ஹிட் ஆனதால் இலியானா சந்தோஷத்தில் இருக்கிறார். சம்பளத்தை உயர்த்தலாமா என இண்டஸ்ட்ரியில் உள்ள தனது நலம் விரும்பிகளிடம் ஆலோசித்து வருகிறார்.
தேர்தலில் போட்டியிடும் தனது அப்பா சத்ருகன் சின்ஹாவுக்காக ட்விட்டரில் பிரசாரம் செய்து வருகிறார் சோனாக்ஷி சின்ஹா. மக்களைச் சந்திக்க வ¤ரும்பிய அவருக்கு ஷூட்டிங்கிலிருந்து லீவு கொடுக்க டைரக்டர்கள் மறுத்துவிட்டார்களாம்.

-ஜியா