சூர்யாவுக்கு போட்டி ப்ரியாமணி





கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாற்றான்’ படத்துக்கு தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் முந்தையப் படமான ‘அயன்’ பம்பர் ஹிட் அடித்திருப்பதால், விநியோகஸ்தர்கள் கேள்வி கேட்காமல் இப்படத்துக்கு முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் ப்ரியாமணி, இரட்டை வேடங்களில் நடித்து வரும் ‘சாருலதா’வின் கதையும், ‘மாற்றானி’ன் ஒன்லைனும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என ஏதோவொரு புண்ணியவான் கொளுத்தி விட்டுப் போக, இப்போது அந்த விஷயம் தீயாக பற்றி எரிந்து வருகிறது. ‘மாற்றானி’ல் இரண்டு சூர்யாக்கள். இருவருமே ஒட்டிப் பிறந்தவர்கள். ‘சாருலதா’வில் இரண்டு ப்ரியாமணிகள். இருவருமே ஒட்டிப் பிறந்தவர்கள் என கோலிவுட் முழுக்க பேச்சாக இருக்கிறது. படம் பார்க்காமல் இப்படி வதந்திகளை பரப்புவது எந்த விதத்தில் நியாயம்?