அஞ்சு பன்ச்சு
நாக்பூர் சொந்த ஊர். ஐதராபாத்தில் குடியேறி விட்டார். தாய்மொழி தெலுங்கு. தமிழில் நடிக்க வந்த பிறகே தமிழில் பேச கற்றுக்கொண்டார். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரும்பாலும் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே பேசுவார்.
தீவிர இசைப்பிரியை. ஓய்வு நேரத்தில் கிடார் வாசிப்பார். பாத்ரூம் பாடகி. தனக்கு விருப்பமான பாடலை, மென்மையான குரலில் பாடுவார். வெளியில் யாராவது பாடச் சொன்னால், வெட்கப்பட்டு சிரிப்பார்.
அடிக்கடி ஜூஸ் குடிப்பார். நெல்லிக்காயை சின்னச்சின்ன துண்டுகளாக்கி, அதில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு கலந்து சாப்பிடுவார். நெல்லியில் வைட்டமின் ‘சி’ அதிகமாக இருப்பதே அதற்கு காரணம்.
நடிப்புக்காக விருது வாங்க வேண்டும் என்பது லட்சியம். உருக்கமான காட்சிகளில், கிளிசரின் இல்லாமல் ஒரிஜினலாக அழுது நடித்து அசத்துவார்.
அப்பா, அம்மா காதலித்து திருமணம் செய்தவர்கள். இவருக்கு காதல் மற்றும் திருமணத்தில் ஈடுபாடு இல்லையாம். நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம். ஐதராபாத்தில் வசிப்பதால், சென்னையில் குடியேற மாட்டாராம். - தேவராஜ்
|