ஆண்ட்ரியாவின் கனவு





நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணிப் பாடகி என சகல ஏரியாக்களிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் ஆண்ட்ரியா, இப்போது ‘விஸ்வரூபம்’ படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கமலுடன் நடித்திருப்பதால் மட்டுமல்ல. இப்படத்தின் இந்தி, தெலுங்கு மொழி  டப்பிங்கும் அவரேதான் செய்திருக்கிறார். கமலின் கட்டளைதான் காரணம். என்றாலும், ‘விஸ்வரூபம்’ அந்தந்த மொழிகளில் வெளியாகும்போது, தனது கேரக்டரும், நடிப்பும் பேசப்படும். அதன் மூலமாக தமிழ் தவிர மற்ற மொழி படங்களிலும் வாய்ப்பு வரும் என மல்லாந்து படுத்தபடி கனவு கண்டுக் கொண்டிருக்கிறார். பகல் கனவோ, இரவு கனவோ பலித்தால் சரி!