சப்பு கொட்டும் ஸ்ரேயா





ஆன்ட்டி ஆகும் வயது வரவில்லை. ஆனால், ‘சின்ன’ வயதிலேயே ஹீரோயின் ஆகிவிட்டதால், இப்போது ஆன்ட்டி நடிகையாகத்தான் ஸ்ரேயாவை பார்க்கிறார்கள். அதற்கேற்ப 50, 60களில் இருக்கும் ‘இளைஞர்களுடன்’தான் ஜோடி சேர்ந்து நடித்தார். கெமிஸ்ட்ரியும் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது! ரசிகர்களும் ஏக மனதாக அவரை கிழவி லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். இப்போது கைவசம், ‘சந்திரா’ படம் இருக்கிறது. இது போக முன்பு அவர் நடித்த ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ தெலுங்குப் படம், இப்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இயக்கம், சேகர் கமுலா. தெலுங்கு சினிமாவின் அடுத்த தலைமுறை இயக்குநர்களில் இவர் முக்கியமானவர். இவரது இயக்கத்தில் உருவான ‘லீடர்’ படம் வழியாகத்தான் ரிச்சா கங்கோபாத்யாயாவும், ராணாவும் அறிமுகமானார்கள். எனவே, தனது இரண்டாவது (அல்லது நான்காவது?!) இன்னிங்சுக்கு இந்தப் படம் வழிவகை செய்யும் என சப்புக் கொட்டுகிறார் ஸ்ரேயா. மொத்தத்தில் ‘லைஃப் இஸ் நொந்த ஃபுல்’ கதைதான்!