குஸ்தி நடிகைகள் : மும்பைபக்கம்





சரப்ஜித் சிங் விடுதலைக்காக பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் சல்மான் கான். ஆமிர்கானை பார்த்துதான் இந்த சமூக அக்கறை சிந்தனை சல்மானுக்கு வந்ததாம்.

ஷாருக்கானுடன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தமிழ் பெண்ணாக நடிக்கிறார் தீபிகா படுகோன். ‘கோச்சடையான’¢ படத்தில் நடித்தாலும் தமிழ் கற்காதவர், ‘சென்னை எக்ஸ்பிர’சுக்காக தீவிரமாக தமிழ் கற்கிறாராம்.

சைப் அலிகானை திருமணம் செய்த பிறகும் தனது பெயரிலிருந்து கபூர் என்பதை நீக்கமாட்டாராம் கரீனா.

‘ஷூட் அட் வாடாலா’ படத்தில் தாவூத் இப்ராகிம் கேரக்டரை ஏற்றிருக்கிறார் சோனு சூட். எனவே, இதுவரை இந்தியில் தாவூத்தை வைத்து வெளியான படங்களை பார்த்து வருகிறார்.

இஷா தியோலின் நெருங்கிய தோழியாக இருந்த கரீனா கபூர், திடீரென மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தார். அதன்பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. இந்நிலையில் இஷா அழைத்தும் அவரது திருமணத்துக்கு வரவில்லை கரீனா. இந்த குஸ்தியை பாலிவுட்டே வேடிக்கைப் பார்க்கிறது.
- ஜியா