பகை வம்சம்
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், ‘உப்பு கண்டம் பிரதர்ஸ்’. இந்தப் படத்தை தமிழில் ‘சத்ரிய வம்சம்’ என்ற பெயரில் செஞ்சுரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெபா, தன் நண்பர்கள் எஸ்.சிங்கார வேல், வி.சரத்குமார், டி.கருணாநிதியுடன் சேர்த்து தயாரிக்கிறார்.
நாயகன் ஸ்ரீகாந்த்துக்கு இதில் ஆக்ஷன், காதல், அம்மா சென்டிமென்ட் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடும் ரோலாம். நாயகியாக ‘சிங்கம் புலி’ ஹனிரோஸ் நடிக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்தாலும் பாடல் காட்சிகளில் தாரளமாக நடித்திருக்கிறாராம். காதல் காட்சிகளில் நாயகனுடனான கெமிஸ்ட்ரி, பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம். ஹனிரோஸின் அண்ணனாக நெகடிவ் ரோலில் ரிச்சர்ட் நடிக்கிறார்.
ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் சுஜிபாலா. பாசமழை பொழியும் இரண்டு குடும்பங்களில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். பாதிக்கப்பட்ட குடும்பம் மற்றொரு குடும்பத்தை சந்தேகத்துடன் பார்க்கிறது. பிரிந்த இரு குடும்பமும் மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறது என்பதை ஆக்ஷன் பின்னணியில் சொல்லியிருக்கிறார்களாம்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள இதில் ஸ்ரீகாந்த் உயிரை பணயம் வைத்து நடித்து கொடுத்துள்ளாராம். உவரி.க.சுகுமார் பாடல்களுக்கு அல்போன்ஸ் இசையமைத்திருக்கிறார். - எஸ்
|