ஒரே நாள் ஓடிய படம்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

        கவிப்பேரரசு வைரமுத்துவின் முதல் பாடல் ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது...’ பிரசவமான 1980 மார்ச் 10 அன்றுதான் அவரது மகன் மதன் கார்க்கியும் பிரசவமானார். இன்று ‘இரும்புக்குள் ஒரு இருதயம் முளைத்ததே...’ என்று எழுதி பிரபலமானார்.

பி.காம் முடித்துவிட்டு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்தார் சூர்யா. முதல் மாத சம்பளம் 1,200 ரூபாய். அதில் அவரது அம்மாவுக்கு புடவை எடுத்துக் கொடுத்தார்.

எம்.ஜி.ஆரின் அப்பா கோபாலமேனன் கேரளாவில் உள்ள இருஞாலக்குடாவில் ஹெட்மாஸ்டராகவும், கவுரவ மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றியவர்.

விஜய் நடித்த ‘பத்ரி’ படப்பிடிப்பின்போது நாயகி பூமிகாவிடம் ஆட்டோகிராப் வாங்கினார் ஸ்ரீகாந்த். பின்னர் அதே பூமிகாவுடன் ‘ரோஜாக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்தார்.

1941ல் வெளியான படம் ‘வனமோகினி’. அந்தப்படத்துக்கு ‘டஜன் கணக்கான அழகு பொருந்திய பெண்களும், நூற்றுக் கணக்கான காட்டு மிராண்டிகளும் நடித்திருக்கும் படம்’ என்று விளம்பரம் செய்யப்பட்டது.

சவுத் இந்தியா பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து 1935ல் வெளிவந்த ‘கௌ சல்யா’ படம், சென்னை கெயிட்டி தியேட்டரில் ஒரே ஒரு நாள் மட்டும் ஓடி சாதனை படைத்தது.

குருவிக்கரம்பை பால முருகன் தியேட்டரில் முறுக்கு விற்று பிழைப்பு நடத்தியிருக்கிறார் கருணாஸ். பள்ளிக் கூடத்தில் இண்டர்வெலில் வேர்க்கடலை, சுண்டல் விற்ற அனுபவமும் அவருக்கு உண்டு.
நெல்பா