சூழ்நிலைதான் பல தருணங்களில் மனித வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘சூழ்நிலை’.
குளோபல் டெலிவிஷன், ஸ்ரீராம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நளதமயந்தி’, ‘ராமேஸ்வரம்’ படங்களில் உதவி இயக்குனராக அனுபவம் பெற்ற செந்தூரன் எழுதி இயக்கி, தயாரித்துள்ள படம் இது.
‘நெல்லு’, ‘வள்ளுவன் வாசுகி’ படங்களின் சத்யா நாயகனாக நடிக்க, பவீனா, பிரியங்கா, காயத்ரி என மூன்று நாயகிகள் இடம் பெற்றுள்ளனர்.
‘நிழல்கள்’ ரவி விஜிலன்ஸ் ஆபீசராக நடிக்கிறார். அவரைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்களில் ஒருவரான முத்துகிருஷ்ணன் வில்லனாக நடித்துள்ளார்.பெரும்பகுதி படப் பிடிப்பு அந்தமானில் நடந்துள்ளது. சில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தப்படத்துக்கு இசையமைப்பதுடன் வில்லனாக நடித்துள்ளார் தினா.
பாலா வசனம் எழுதியுள்ளார். அறிவுமதி, யுகபாரதி, நார்வேயைச் சேர்ந்த கவிதா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
சென்னை பெரம்பூரில் அமைக்கப்பட்ட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளில் மாஸ்டர் மின்னல் முருகன் பேசப்படுவார் என்கிறது படக் குழு.
“ஆபத்து நிறைந்த ஆதி வாசிகளுடன் பல நாட்கள் மறைமுகமாக தங்கியிருந்து ஆய்வு செய்து, திரைக்கதை அமைத் துள்ளேன். இது சகலமும் நிறைந்த மசாலா படமாக இருந்தாலும், கருத்து சொல்லும் படமாகவும் இருக்கும்” என்கிறார் இயக்குனர் செந்தூரன்.
நெல்பா