“நன்றாக படிக்கும் ஏழைப்பெண் தனலட்சுமிக்கு, கல்லூரியில் படிக்க சீட் கிடைக்கிறது. ஆனால், படிப்புக் கட்டணம் செலுத்த அவரிடம் பணம் இல்லை. இந்த நிலையில், கோடீஸ்வரன் பார்த்தசாரதி அவருக்கு பண உதவி செய்து படிக்க வைக்கிறார். அதற்கு பிரதிபலனாக அவளையே கேட்கிறார். அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. இதற்கிடையே தனலட்சுமியை சக மாணவன் பாண்டியன் காதலிக்கிறான். தனலட்சுமி என்ன முடிவு எடுக்கிறார் என்பதே ‘கோவலனின் காதலி’ படத்தின் கதை” என்கிறார் இயக்குனர் அர்ஜுன் ராஜா.
குட் டே பிலிம்ஸ் சார்பில் இரா. தமிழ்ச் செல்வன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார் கே.அர்ஜுன் ராஜா.
தனலட்சுமியாக கிரண்மை, பாண்டியனாக திலீப் குமார், பார்த்தசாரதியாக கசன்கான் நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ‘காதல்’ தண்டபாணி, சுமன்ஷெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். மும்பை மாடல் அழகி நவ்தீத் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நா.முத்துக்குமார், யுகபாரதி பாடல்கள் எழுத, பாரதி .கே இசையமைத்துள்ளார்.
கண்ணகி வாழ்ந்த பூம்புகாரிலும், மாதவி வாழ்ந்த தரங்கம் பாடியிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
என்