எம்.சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘போராளி’ படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சாந்தமாக தோற்ற மளிக்கும் சசிகுமார், ஆக்ரோஷ பார்வையுடன் குதிரை மீது பாய்ந்து வரும் ஸ்டில்களைப் பார்த்து முன்னணி நாயகர்களே கொஞ்சம் மிரண்டு போய், படத்தைப் பார்க்கும் ஆவலுக்கு உந்தப் பட்டிருக்கிறார்கள்.
படத்தில் இடம் பெற்றுள்ள ‘வேகமாய்...’ என்ற தீம் மியூசிக் நமது மயிர்க்கால்களை எல்லாம் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. சுந்தர் சி.பாபு இசையில் எல்லா பாடல்களும் ஒவ்வொரு வகையில் ஈர்க்கின்றன. ‘விதியே போற்றி...’ என்ற பாடலை சசிகுமாரும் சமுத்திரக்கனியும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
சின்னச் சின்ன விஷயங் களில் கூட சிரத்தை எடுத்து உழைக்க விரும்பியதால் இயக்குனர் வேலையை மட்டும் பார்த்த சமுத்திரக்கனி, இந்தப் படத்தில் நடிக்கவில்லை. உதாரணத்துக்கு வசனம் இல்லாமலே நாட்டு நடப்பைச் சொல்லும் ஒரு காட்சி. ஒரு கேரக்டர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் சீன் நான்கைந்து முறை வருகிறது. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், ஒவ்வொரு முறை பெட்ரோல் போடும்போதும் விலை ஏற்றம் எழுதப்பட்டிருக்கும்.
சசிகுமார் - சமுத்திரக்கனி வெற்றிக் கூட்டணியில் உருவாகி யிருக்கும் ‘போராளி’யை தென்னிந்திய சினிமாக்காரர்கள் மட்டுமல்ல, பாலிவுட்டும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாரதி