படிப்பு வேண்டாம் நடி



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            படிப்பு வேண்டாம் நடி

நாகர்கோவிலில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜான். எல்லா அம்மாக்களும், மகனை படி, படி என்பார்கள். இவரது அம்மா மீனா, தனது மகனை நடி, நடி என்று சொல்லி தினந்தோறும் ஒரு திரைப்படத்தை பார்க்க வைக்கிறார். படங்களைப்  பார்த்தே நடிப்பு கற்றுக் கொண்ட ஜானுக்கு சீரியல் வாய்ப்பு வந்தும் அதை தவிர்த்துவிட்டு, சினிமாவில்தான் அறிமுகம் ஆவேன் என பிடிவாதமாக இருக்கிறார். சவுதி அரேபியாவில் ஒரு நிறுவனத்தில் மேனேஜராக இருக்கும் இவரது அப்பாவும் மகனின் ஆர்வத்துக்கு பச்சைக்கொடி காட்டி வருகிறார்.

கராத்தே வில்லன்

கதாநாயகனுக்குரிய அத்தனை பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார் கோயம்புத்துதூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன். கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ள இவரை வில்லன் நடிகர் பொன்னம்பலம், தனது ‘இடியுடன் கூடிய மழை’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தியுள்ளார். சரோஜ்குமார் இயக்கும் ‘அல்லி நகரம்’ படத்தில் இவருக்கு இன்ஸ்பெக்டர் கேரக்டர் கிடைத்துள்ளது. ராஜாஜி இயக்கும் ‘நல்லவன்’ படத்தில் பிரதான வில்லனாக படம் முழுக்க வரும் கேரக்டர் கிடைத்துள்ளது. நடிப்பல் தனித்து தெரிய வேண்டும் என்பதே இவரது லட்சியம்.

ஷங்கர் கூப்பிட்டார்

தேசிய அளவில் குத்துச்சண்டை சாம்பியனாக தேர்வானவர் லாம்பட். பெசன்ட் நகர் ஜிம்மில் இவரைப் பார்த்த டைரக்டர் ஷங்கர், தனது ‘பாய்ஸ்’ படத்தில்  ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்க வைத்தார். 25 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவியுள்ள லாம்பட்,   ‘ரமணா’, ‘ஆறு’, ‘சிறுத்தை’, ‘வெடி’ படங்களில் நடித்துள்ளார். ‘துருப்புகுலான்’, ‘ராக் அண்ட் ரோல்’ மலையாளப் படங்களிலும் ‘பங்காரம்’, ‘வெங்கடாத்ரி’ தெலுங்குப் படங்களிலும் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

கண்ணாடி வளையல்கள் என்றாலே சமீராரெட்டிக்கு அலர்ஜியாம்.