துப்பட்டா பத்துமா?ரீடர்ஸ் கிளாப்ஸ்!

கண்களை கொள்ளையடித்த அழகிய திருடி நிரஞ்சனி யாரென்று தேடிக் கொண்டிருந்தோம். தமிழுக்கு தங்கத் தாமரை விருது பெற்றுக் கொடுத்த இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி.
- கவிஞர் கா. திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘பல்லு படாம பார்த்துக்க’ என்கிற விவகாரமான தலைப்பை வைத்துக் கொண்டு ஹாலிவுட் லெவல் கதையை யோசித்திருக்கும் இயக்குநர் விஜய்வரதராஜின் முயற்சிக்கு ஒரு சல்யூட். வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோ தினேஷுக்கு வாழ்த்துகள்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

39-ஆம் பக்க பூஜா ஹெக்டே புளோ-அப்புக்கு ‘ஒரு கட்சியோட சின்னம் தெரியுதா?’ன்னு கேட்டிருந்தீங்க. எத்தனையோ தடவை உற்றுப் பார்த்தேன். பறக்கும் குதிரையோட றெக்கைதான் தெரிஞ்சது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

டணால் தங்கவேலுவின் வாரிசான அவரது பேரன் விஷால் ராஜனின் அறிமுகமும், பேட்டியும் அபாரம்.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

டி.ஆருக்கு ஜோடி நமீதா என்பது செம ஹாட் நியூஸ். நமீதாவின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடிக்கும் என்று நம்புவோமாக.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

நடுப்பக்க மோனிகாவை மூட ‘துப்பட்டா போடுங்க தோழி’ன்னு கமெண்டு போட்டிருக்கீங்களே?
துப்பட்டா பத்துமா சார்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அட்டையிலே அல்வா. நடுப்பக்கத்துலே ஜிகர்தண்டா. வாசகர்களை குஷிப்படுத்துவதில் ‘வண்ணத்
திரை’க்கு நிகரே இல்லை.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.