பிட்டு பஜாரு!‘கொம்பு வெச்ச சிங்கம்டா’, ‘எம்.ஜி.ஆர்.மகன்’, ‘ராஜ வம்சம்’ என்று வரிசையாக நாயகனாக நடிக்கும் படங்களை கைவசம் வைத்திருந்தாலும் டைரக்‌ஷன் பண்ணுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறாராம் சசிக்குமார். அதன்படி அடுத்த ஆண்டு டைரக்‌ஷனுக்கு ஒதுக்கியுள்ளாராம்.  அந்தப் படத்தின் நாயகன் விஜய்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் வாழ்க்கை வரலாறு சினிமாவாகிறது. 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்  என்பதால் படத்துக்கு ‘800’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள். இந்தப் படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் பூபதி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைப்பெறவுள்ளது.

மண் சார்ந்த கதைகளை படமாக்குவதில் புகழ்பெற்ற அந்த இயக்குநர் இப்போது நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் கூட இவர் கதையின் நாயகனாக நடித்தப் படம் வெளியானது. இயக்குநரை தங்கள் படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இளம் இயக்குநர்கள் ‘மலை’ இயக்குநரை அணுகினால் சம்பளமாக ஒரு விரல் காண்பித்து பெரிய தொகையை கேட்கிறாராம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒலிப்பெருக்கி நாயகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்தப் படத்தில் ப்ரெண்ட் ரோலில் நடிக்க தற்போது உச்சத்தில் இருக்கும் அந்த காமெடி நடிகரை அணுகியுள்ளார்கள். அவரோ ‘நான் இப்போது விஜய், அஜித் ப்ரெண்டா நடித்து வருகிறேன். அது உங்களுக்கு பொறுக்கவில்லையா’ என்று திருப்பி அனுப்பிவிட்டாராம்.

வருடத்துக்கு ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். கடந்த ஆண்டு ‘கேப்மாடொ’ படத்தை இயக்கியவர் இந்த ஆண்டு அடுத்தப் படத்தை இயக்க தயாராகியுள்ளாராம். இதில் அபி, நந்திதா நாயகன், நாயகி களாக நடிக்கவுள்ளார்கள்.