தண்ணியும், தம்மும் அடிக்கிறேனா? கொதிக்கிறார் மகிமா!தமிழில் ‘சாட்டை’ படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான மலையாள நடிகை மகிமா நம்பியார், இன்னும் அந்த பள்ளி மணம் மாறாத மாணவியாகவே இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘அசுர குரு’ படத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருந்தார். சிகரெட் புகைத்தபடி வில்லன்களை தேடும் தனியார் டிடெக்டிவ் வுமனாக நடித்திருந்தார். இப்போது ‘பெல்பாட்டம்’ படத்தில் நடிக்கிறார்.

“பார்க்க அப்பாவி மாதிரி இருக்கீங்க. ஆனா, ‘மகா முனி’ படத்தில் தண்ணி அடிக்கிறீங்க. ‘அசுர குரு’ படத்தில் தம் அடிக்கிறீங்களே...?”
“அதெல்லாம் படத்தில் நான் ஏற்று நடிக்கிற கேரக்டருக்குத்தானே? நிஜத்தில் இல்லையே. ‘மகா முனி’ தீபாவும், ‘அசுர குரு’ தியாவும் என் மனசுக்கு நெருக்கமான கேரக்டர்கள்.

இந்த கேரக்டர்களை பற்றி டைரக்டர்கள் சொல்றப்பவே, ‘தண்ணி அடிக்கிற சீன் இருக்கு’, ‘தம் அடிக்கிற சீன் இருக்கு’ன்னு சொல்லித்தான் கமிட் பண்ணாங்க. நானும் அந்த கேரக்டர்களுக்கு இந்த விஷயங்கள் ரொம்பவே தேவைப்படுது என்பதை உணர்ந்து நடிச்சேன். ஆனா, நிஜத்தில் தண்ணி பக்கமும், தம்மு பக்கமும் நான் போனதில்லை. இது ரெண்டையும் அடிக்கிறவங்களை பார்த்தா, கொரோனாவைப் பார்க்குற மாதிரி பார்த்து பயந்துப்போய் ஒரு அடி தள்ளித்தான் நிற்பேன்.”

“பெண்கள் தண்ணி, தம்மு அடிப்பது பற்றி உங்க கருத்து என்ன?”

“இதில் எதுக்கு ஆண், பெண் என்று வித்தியாசம் பார்க்கணும்? ஆண்கள் செய்யும் எல்லா விஷயத்தையும் பெண்களும் செய்ய உரிமை இருக்கு. அந்தவிதத்தில் இதுக்கு பதில் சொல்றேன். தண்ணி அடிப்பதும், தம் அடிப்பதும் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம், விருப்பம். தண்ணி அடிக்கக்கூடாது, தம் அடிக்கக்கூடாதுன்னு எந்த சட்டமும் கிடையாது.

ஆனா, மத்தவங்களுக்கு அது இடைஞ்சலா இருக்கக்கூடாது என்பதுதான் சட்டம். அதை தீவிரமா ஃபாலோ பண்ணணும். தண்ணி அடிப்பதும், தம் அடிப்பதும் கெட்ட பழக்கம்னோ, அதை பண்ற எல்லாரும் கெட்டவங்கன்னோ சொல்ல மாட்டேன். இது ரெண்டுமே உடல்நலத்துக்கு ரொம்ப தீங்கான பழக்கம். அவங்களை மட்டுமல்ல, குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கிற பழக்கம்.”

“கிருஷ்ணா கூட நடிக்கும் ‘பெல்பாட்டம்’ படத்தில், என்ன கேரக்டரில் நடிக்கிறீங்க?”

“அது கன்னட ரீமேக் படம். கன்னடத்தில் ஹரிப்பிரியா நடிச்ச கேரக்டரில் தமிழில் நான் நடிக்கிறேன். 1980களில் நடக்கும் காதல் கதை இது. அதனால், அந்த காலக்கட்டத்தை சேர்ந்த ஆடைகள், மேக்கப், ஹேர்ஸ்டைலுடன் நடிக்கிறேன். இதுவரை நான் நடிச்ச படங்களில் இது ரொம்ப புதுசா இருக்கும். முதல்முறையா கிருஷ்ணாவுக்கு ஜோடியா நடிக்கிறேன். கன்னடத்தில் ரிலீசான ‘பெல்பாட்டம்’ படத்தை பார்க்க நினைச்சேன். ஆனா, தமிழ் ரீமேக் டைரக்டர் பெர்மிஷன் கொடுக்க மறுத்துட்டார். அந்த படத்தை பார்த்தா, என் நடிப்பில் ஹரிப்பிரியாவின் சாயல் வந்துடும்னு சொல்லிட்டார். இந்த காரணத்துக்காக அந்த படத்தை நான் பார்க்கலை.”

“மலையாளியான நீங்க, தமிழ்ப் படங்களில்தான் அதிகமா நடிக்கிறீங்க. அதுக்கு என்ன காரணம்?”

“எனக்கு நல்ல கேரக்டர்கள் கொடுத்து வளர்த்து விட்டது தமிழ் படங்கள்தான். ‘சாட்டை’யில் தொடங்கி, ‘குற்றம் 23’ வரையிலான போராட்டத்தில், எந்த மலையாளப் பட வாய்ப்பும் என்னை தேடி வரலை. தமிழில் ரிலீசான ‘குற்றம் 23’ படத்தை பார்த்த பிறகுதான், மம்மூட்டி நடிச்ச ‘மாஸ்டர் பீஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க.

ேகாலிவுட்டில் என்னை நான் நிரூபிச்ச பிறகுதான் மல்லுவுட் பட வாய்ப்பு வந்தது. அதனால், எப்பவுமே நான் தமிழ் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். வாய்ப்பு கிடைச்சா மலையாளப் படங்களிலும் நடிப்பேன். இப்ப பத்மகுமார் இயக்கும் ஒரு படத்தில், ஆசிஃப் அலிக்கு ஜோடியா நடிக்கிறேன். இது ஃபேமிலி சப்ஜெக்ட்.”

“இது பயோஃபிக் பட சீசன். நீங்க எந்த கேரக்டரில் நடிக்க ஆசைப்படறீங்க?”

“பி.டி.உஷா கேரக்டரில் நடிக்க ரொம்ப ஆசை. காரணம், எங்க வீட்டில் ஒரு பி.டி.உஷா இருந்தார். அவர், என் அம்மா வித்யா. அவர் ஸ்டேட் லெவலில் ஓடி பதக்கம் வாங்கினார். நான் பிறந்த பிறகுகூட அவர் ஓட்டப்பந்தய வீராங்கனையா இருந்தார். அவருக்கு விளையாட்டில் நிறைய சாதிக்கணும் என்ற லட்சியம் இருந்தது. ஆனா குடும்பம், வாரிசுன்னு வந்த பிறகு எல்லாத்தையும் விட்டுட்டார். அம்மாவின் கனவை சினிமாவிலாவது நிறைவேத்த முடியுமான்னு பார்க்கலாம்.”

“மல்டி ஹீரோயின் சப்ஜெக்டில் நிறைய நடிக்கிறீங்களே?”

“அதில் என்ன தப்பு? நான் எப்பவுமே ஹீரோயினா மட்டுமே நடிப்பேன்னு எங்கேயும் சொல்லலை. விஜய் சேதுபதி கூட நான் நடிச்ச ‘புரியாத புதிர்’ படத்தில் காயத்ரிதான் ஹீரோயின். சசிகுமாரின் ‘கொடிவீரன்’ படத்தில் மூணு ஹீரோயின்களில் ஒருத்தியா நடிச்சேன். இந்த மாதிரி நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. என் ேகரக்டர் நல்லா இருக்கான்னு மட்டும்தான் பார்ப்பேன்.”

“இன்னமும் உங்க அம்மாவின் கையை பிடிச்சுக்கிட்டே நடக்கறீங்களே. ஏன், தனியா வர பயமா?”

“நான் பார்க்கத்தான் இப்படி இருக்கேன். ஆனா, நான் ரொம்ப துணிச்சலான பெண். எனக்கு நெருக்கமா இருக்கிறவங்களுக்கு இந்த விஷயம் நல்லா தெரியும். ஒரு உதவிக்காகத்தான் அம்மாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூடவே அழைச்சுக்கிட்டு வர்றேனே தவிர, என் பாதுகாப்புக்காக இல்லை.”“ஓக்கே. நிறைய பேசிட்டோம். கடைசியா ஒரு கேள்வி. யாரையாவது காதலிக்க உங்களுக்கு ேநரம் இருக்கா?”

“உண்மையை சொன்னா, யாரையும் காதலிக்க நேரமும் இல்லை. அதுக்கு தகுந்த ஆளும் இல்லை. சினிமாவில் நடிக்கிறதுக்கே ேநரம் சரியா இருக்கு. எனக்கு அரேஞ்டு மேரேஜ் பண்ணி வைக்க அம்மாவுக்கு ஆசை. ஆனா, அந்த ஆசைக்கு எல்லாம் என்னால் உத்தரவாதம் தர முடியாதுன்னு சொல்லிட்டேன். பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்காலத்தில் என்ன நடக்கும்னு இப்பவே சொல்ல முடியாது.”

- மீரான்