பத்தாம் வகுப்பு மாணவி எழுதியிருக்கும் பாட்டு!சினிமாக்காரர்களில் பணத்துக்காக படம் எடுப்பவர்கள் உண்டு. சமூகத்துக்காக படம் எடுக்கிறவர்கள் உண்டு. இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர் இயக்குநர் நாவலன். விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் எடுக்கும் படம் ‘புதிய தீர்ப்பு’.
விளையாத நிலங்களை என்னவோ பண்ணிட்டு போங்க, விளையும் நிலங்களை நாசமாக்காதீங்க. பயிர் நட்டு பசுமையாக இருந்த இடங்களை இன்று கல் நட்டு கறம்பாக்குறீங்க என்று வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கும் கும்பலை எதிர்த்து போராடும் இளைஞனின் கதைதான் படம்.

திருமலைவாசா கிரியேஷன்ஸ்  சார்பில் தர்மலிங்கம், வாசு, கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் கீர்த்தி நாயகனாக நடிக்கிறார். ராணி திருவல்லி  நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘பெசன்ட்’ ரவி, முல்லை கோதண்டம், பவானி சிவம் நடிக்கிறார்கள். இவர்களோடு சர்வோதயா ராமலிங்கம், ஜெயராஜ், ராஜசேகர், அயரின் ஆகியோரும் இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு பாலமுருகன். இசை எழிலரசன். ‘சொல்ல சொல்ல அன்பச் சொல்ல... உள்ளுக்குள்ள ஊறுது... ஊறுது காதலு... எனும் பாடலை பத்தாம் வகுப்பு மாணவி மணிமொழி எழுதியுள்ளாராம்.

- ரா