ஓட்டல் சாப்பாடு!சரோஜாதேவி பதில்கள்

கொரோனா காலத்தில் கல்யாணம் செய்தவர்களின் கதி?
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
டிவியிலே படம் பார்த்துக்க வேண்டியதுதான்.

ஒரு நிமிட சொர்க்கமே.. உன்னிடம் வயாக்ராவும் தோற்று நிற்குமா.. உனை காணத் தவிக்கும் ஆடவர் வர்க்கமே.. நீ வருவாயா எந்தன் பக்கமே..
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
கவிஞர்களுக்கு வாய்தான் வாடிப்பட்டி வரை நீளுகிறது.

தும்மினால் கொரோனா வருமா?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
நீர் கையை காலை வெச்சுக்கிட்டு சும்மா இல்லேன்னா
என்னென்னவோ நோய்கள் வரும்.

வீட்டு சாப்பாடு vs ஓட்டல் சாப்பாடு. என்ன வித்தியாசம்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஓட்டல் சாப்பாடு கொஞ்சம் ஓப்பனா இருக்கும். ஆனா, வீட்டு சாப்பாடுதான் உடம்புக்கு நல்லது.

உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் யார் வீக்.. ஆணா, பெண்ணா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
ஆணின் உணர்ச்சி அப்பட்டமா தெரியும் சார்.