சிக்கன் 65ரீடர்ஸ் கிளாப்ஸ்!

அட்டையில் பிரியா ஆனந்தின் அட்டகாசமான போஸை கண்டு அரண்டு விட்டோம். படமெடுத்த கார்த்திக் சீனிவாசுக்கு வாழ்த்துகள்.
- ஆர்.கார்த்திகேயன், சென்னை-102.

திருமணமான நடிகைகள் செக்ஸ் சிம்பலாக முடியாது என்கிற மூடநம்பிக்கையை முற்றிலுமாக துடைத்தெறிந்த பழம்பெரும் நடிகை
பிந்துவுக்கு பகுத்தறிவு சல்யூட்.
- கே.கே.பாலசுப்பிரமணியன், கோவை.

பலரும் மறந்துவிட்ட நட்சத்திரங்களை நினைவுபடுத்தும் ‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ தமிழ் இதழியல் உலகில் ஓர் அரிதான தொடர். பைம்பொழில் மீரான் வாழ்க. வளர்க.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

பின்னட்டை யாஷிகா ஆனந்த், பின்னிவிட்டார். ஹோம்லி + கிளாமர் என்கிற லுக் அபூர்வம். யாஷிகாவுக்கு இரண்டுமே வாய்த்திருக்கிறது.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நடுப்பக்க மகேஸ்வரி பாபிலோனா கார்டன் மாதிரி தெரியவில்லையே? நம்மூர் மாநகராட்சிப் பூங்கா ரேஞ்சுக்கு மங்களகரமாக இருக்கிறார்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

சரோஜாதேவி பதில்கள் பகுதி சிக்கன் 65 ரேஞ்சுக்கு சூடாகவும், சுவையாகவும் இருக்கிறது.
- எஸ்.அன்சாரி, உடுமலைப்பேட்டை.

அட. நம்ம ஓவியர் ஷ்யாமும் நடிகர் ஆகிறாரா? அவருடைய ஓவியம் மாதிரியே கவர்ச்சியும், கலையழகுமாக தமிழ் சினிமாவில் வலம் வரட்டும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.