நாட்டுக் கோழி!பாலிவுட்டில் பிசியான பிறகும், புது கார் வாங்கின பிறகும் சிம்பிள் அண்ட் ஹம்பிளை கடைப்பிடிக்கிறார் டாப்ஸி. ரோட்டோர கடைகளில் சாப்பிடுவது என்றால் டாப்ஸிக்கு அத்தனை இஷ்டம். ராதிகா ஆப்தேவைப் போல சட்டென ரோட்டுக்கடைகளில் சாப்பிட்டு மகிழ்கிறார். அதுவும் ஸ்பைஸி ஃபுட் பிரியை.

காரசாரமான வட இந்திய டிஷ்கள் என்றால் இன்னும் இஷ்டம். தவிர சிக்கனும் பிடிக்கும். ஆனா, மீன் சாப்பிட பிடிக்காது. கடல் உணவுகள் என்றாலே, அந்த ஸ்பாட்டிலிருந்து பொண்ணு கிரேட் எஸ்கேப் ஆகிவிடும். ஸோ, டாப்ஸிக்கு நாட்டுக்கோழியா பொரிச்சு வைங்க பாஸ்!

- மை.பாரதிராஜா