நிறையாத குடம்!சரோஜாதேவி பதில்கள்

அதிரடித் தாக்குதல் எப்போது உதவும்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஆத்திர அவசரத்துக்கு உதவும். மற்றபடி விக்கெட் விழாமல் டொக்கு வைத்து ஆடுவதே ஆட்டத்துக்கு அழகு.

நிம்போமேனியாக் என்றால்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
நிறையாத குடம். தளும்பிக்கிட்டே இருக்கும்.

மச்சம் எங்கிருந்தால் மச்சானுக்கு யோகம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மற்ற விஷயங்களைவிட மச்சம்தான் மச்சானுக்கு ரொம்ப முக்கியமோ?

அடிக்க அடிக்க அம்மியும் நகருமாமே?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் ஆகிடமுடியாது.

முதலிரவில் ஆண் தூங்காமலிருக்க என்ன செய்யவேண்டும்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
கொடுத்தவுடனேயே முழுச்சொம்பு பாலையும் குடித்துவிடக்கூடாது.