கம்பு சேமியா வித் ஸ்வீட்கார்ன் டிலைட்



என்னென்ன தேவை?

கம்பு சேமியா - 200 கிராம்,
பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
வேகவைத்த இனிப்பு சோள முத்துக்கள் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இலைகள்.

எப்படிச் செய்வது?

சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து கம்பு சேமியாவை சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். வேகவைத்த சோள முத்துக்கள், உதிர்த்த சேமியா, கறிவேப்பிலை, சர்க்கரை சேர்த்து கிளறி பரிமாறவும்.