சில்லி சாஸ் லெமன் சேமியா



என்னென்ன தேவை?

லெமன் சேமியா - 100 கிராம்,
பச்சைமிளகாய் - 5,
சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய், நெய் - தேவைக்கு,
சர்க்கரை - 1 சிட்டிகை.

தாளிக்க...

கடுகு - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
முந்திரி - 10,
நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

லெமன் சேமியாவை சுடுநீரில் போட்டு வடிகட்டி உதிர்த்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், முந்திரி தாளித்து, பச்சைமிளகாய் விழுது, சில்லி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறவும். பின் லெமன் சேமியா, லெமன் சேமியா மசாலா, கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சில்லி சாஸ் சேர்த்து கிளறி பரிமாறவும்.