ட்ரை ஃப்ரூட் ராகி சேமியா



என்னென்ன தேவை?

முந்திரி, திராட்சை, பேரீச்சை, பாதாம், வெள்ளரி விதை, வெல்லம் அனைத்தும் சேர்த்து - 100 கிராம்,
நெய் - 50 கிராம்,
பால் பவுடர் - 2 டீஸ்பூன்,
சர்க்கரை பொடித்தது - 3 டீஸ்பூன்,
ஏலப்பொடி - 1/4 டீஸ்பூன்,
உலர்ந்த கொப்பரைத்துருவல் - 3 டீஸ்பூன்,
ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

உலர்பழங்களைப் பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர், 1 சிட்டிகை உப்பு, நெய், ராகி சேமியாவை சேர்த்து கொதிக்க விட்டு ராகி சேமியா முக்கால் பதத்திற்கு வெந்ததும் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி எடுத்து மீண்டும் வடிகட்டவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் உலர்பழங்களை வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டிய ராகி சேமியா, கொப்பரைத்துருவல், வெள்ளரி விதை, பால் பவுடர், பொடித்த சர்க்கரை, ஏலப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.