வீட் சேமியா பிரியாணி



என்னென்ன தேவை?

வீட் சேமியா - 200 கிராம்.

அரைக்க...

புதினா - 1 கைப்பிடி,
இஞ்சி பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு - 1/2 டீஸ்பூன்,
லவங்கம், பட்டை - தலா 2,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரி - 4,
கசகசா - 1 டீஸ்பூன்.

வதக்க...

பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு அனைத்தும் கலந்தது - 1 கப்,
நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
நெய் - 50 கிராம்,
பொரித்த பிரெட் துண்டுகள் - 3/4 கப்,
கொத்தமல்லி - சிறிது.

எப்படிச் செய்வது?

வீட் சேமியாவை உப்பு, எண்ணெய் கலந்த சுடுநீரில் போட்டு வடிகட்டி அலசி உதிர்த்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருட்களை அரைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாசனை போக வதக்கவும். பின் மிளகாய்த்தூள், அரைத்த மசாலா வதக்கி, காய்கறிகளை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் வதக்கவும். உதிர்த்த சேமியாவை சேர்த்து கிளறி பொரித்த பிரெட் துண்டுகள், கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.