சோளம் சேமியா வித் கிரவுண்நட்



என்னென்ன தேவை?

சோளம் சேமியா - 200 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்,
எலுமிச்சைச்சாறு - சிறிது.

தாளிக்க...

கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் - 1,
கறிவேப்பிலை - 10 இலைகள்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சுடுநீரில் உப்பு, எண்ணெய் கலந்து சோளம் சேமியாவை சேர்த்து வடிகட்டி அலசி உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை வதக்கி, வேர்க்கடலை பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, உதிர்த்த சோளம் சேமியா சேர்த்து கிளறி, எலுமிச்சைச்சாறு பிழிந்து பரிமாறவும்.