டேமரிண்ட் ஸ்பைசி பீஸ் சேமியா



என்னென்ன தேவை?

டேமரிண்ட் சேமியா - 200 கிராம்,
வேகவைத்த பச்சைப்பட்டாணி - 100 கிராம்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்.

தாளிக்க...

எண்ணெய் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
உப்பு - சிறிது.

எப்படிச் செய்வது?

டேமரிண்ட் சேமியாவை உப்பு, சிறிது எண்ணெய் கலந்த சுடுநீரில் போட்டு வடிகட்டி அலசி உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சைமிளகாய் தாளித்து, உப்பு, மிளகாய்த்தூள், பட்டாணி, டேமரிண்ட் சேமியா, டேமரிண்ட் சேமியா மசாலா சேர்த்து கலந்து இறக்கவும். அலங்கரித்து சூடாக பரிமாறவும்.