வீட் சேமியா கோஸ் பக்கோடா



என்னென்ன தேவை?

வீட் சேமியா - 100 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
பொட்டுக்கடலை மாவு - 25 கிராம்,
மிளகாய்த்தூள், சோம்பு, நசுக்கிய பூண்டு - தேவைக்கு,
இஞ்சித்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - 1,
முட்டைக்கோஸ் - 100 கிராம்,
நறுக்கிய புதினா, கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

சேமியாவை வெந்நீர் விட்டு 3 நிமிடங்கள் ஊறவிடவும். இத்துடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் கலந்து சூடான எண்ணெயில் பக்கோடாவாக உதிர்க்கவும். பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.