சோளம், வரகு சேமியா, வேர்க்கடலை கிச்சடி



என்னென்ன தேவை?

சோளம் சேமியா, வரகு சேமியா - தலா 100 கிராம்,
உப்பு - சிறிது.

தாளிக்க...

நெய் - 2 டீஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
வேர்க்கடலை - 1/4 கப்,
மோர்மிளகாய் - 4.

எப்படிச் செய்வது?

சேமியா வகைகளை தனித்தனியே கொதி நீரில் உப்பு, எண்ணெய் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவிட்டு வடித்து குளிர்ந்த நீரில் அலசி மீண்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வேர்க்கடலை, மோர்மிளகாய் தாளித்து சோளம், வரகு சேமியா சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.