கீரை மண்டி



என்னென்ன தேவை?

அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் ஏதேனும் - 1 கட்டு,
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 2,
பச்சைமிளகாய் - 5,
பூண்டு - 10 பல்,
புளி - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - சிறிது.

தாளிக்க...

நல்லெண்ணெய்- 5 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
கடுகு - 10 கிராம்,
சீரகம்- 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி கழுவிய தண்ணீரைத் தெளிய விட்டு, அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும். மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் தாளித்து, வெந்த கீரையை சேர்த்து நன்கு மசிக்கவும். இத்துடன் சிறிது புளிக்கரைசல் மற்றும் மண்டியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.