கவுனி அரிசி இனிப்பு



என்னென்ன தேவை?

கவுனி அரிசி - 1/4 கிலோ,
நாட்டு சர்க்கரை - 1 கப்,
தேங்காய் - 1 மூடி (துருவவும்),
நெய் - 2 ஸ்பூன்,
முந்திரி, திராட்சை - சிறிது.

எப்படிச் செய்வது?

கவுனி அரிசியை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் 15 நிமிடம் வேக விடவும். வெந்ததும் அதில் நாட்டு சர்க்கரை, முந்திரி, நெய், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.