கேழ்வரகு வேர்க்கடலை அல்வா
என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு - 100 கிராம், வேர்க்கடலை - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், நாட்டு சர்க்கரை - 250 கிராம், நெய் - 200 கிராம், வெள்ளை பூசணி அல்லது கேரட் - 100 கிராம், பால் - 150 மி.லி.
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவை நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். ஆறியதும் தண்ணீர் சேர்த்து தோசைமாவுப் பதத்திற்கு கரைக்கவும். கடாயில் பாலை ஊற்றி கொதிக்க வைத்து, துருவிய பூசணியை சேர்த்து வேக வைக்கவும். பின் நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும். சிறிது கெட்டியானதும், கரைத்த கேழ்வரகு மாவை ஊற்றி, நெய் விட்டு மெதுவாக கிளறவும். கடாயில் பக்கங்களில் ஒட்டாமல் பதம் வரும்வரை நெய் விட்டு கிளறவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு முந்திரி, வேர்க்கடலை, தேங்காய்த்துருவல் வறுத்து, அல்வாவில் சேர்த்து கிளறி இறக்கவும்.
|