வரகு அரிசி பிரியாணி



என்னென்ன தேவை?

வரகு அரிசி - 1 கிலோ,
பட்டை - 10 கிராம்,
கிராம்பு - 10 கிராம்,
ஏலக்காய் - 10 கிராம்,
எண்ணெய் - 250 மி.லி.,
மிளகாய்த்தூள் - 4 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,

தண்ணீர் - 300 மி.லி,
பச்சைப்பட்டாணி - 150 கிராம்,
வெங்காயம் - 350 கிராம் (நறுக்கியது),
தக்காளி - 300 கிராம் (நறுக்கியது),
புதினா - 1 கட்டு,
கொத்தமல்லித்தழை - 1 கட்டு,
முந்திரி - 150 கிராம்,
நெய் - 100 மி.லி.,
எலுமிச்சைப்பழம் - 2,
கேரட் - 300 கிராம்,
பீன்ஸ் - 200 கிராம்,
உருளைக்கிழங்கு - 200 கிராம்,
தயிர் - 200 மி.லி.,
இஞ்சி - 100 கிராம்,
பூண்டு - 60 கிராம்.

எப்படிச் செய்வது?

அடுப்பில் வெறும் கடாயில் வரகு அரிசியை வறுக்கவும். பின்பு தண்ணீர் சேர்த்து 20 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, தயிர், புதினா, கொத்தமல்லித் தழை, நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வரகு அரிசியை சேர்த்து கிளறி 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பிரியாணி பதத்திற்கு வந்ததும், இறக்கி சிறிது நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.