கோதுமை வாழைப்பழ அடை



என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 350 கிராம்,
வாழைப்பழம் - 2,
பன கருப்பட்டி - 200 கிராம்,
ஏலக்காய் - 5 கிராம் (பொடிக்கவும்),
முந்திரிப்பருப்பு - 100 கிராம் (நறுக்கவும்),
நெய் - 20 மி.லி.,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் - 100 கிராம்,
தண்ணீர் - 1/2 லிட்டர்.

எப்படிச் செய்வது?

கருப்பட்டியை சிறிது தண்ணீரில் கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை நன்கு மசித்து, இத்துடன் கோதுமை மாவு, ஏலக்காய்த்தூள், கரைத்த கருப்பட்டியை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். தோசைக்கல்லை காயவைத்து சிறிது நெய் விட்டு அடையாக ஊற்றி மேலே முந்திரிப்பருப்பு, தேங்காயை தூவி மிதமான சூட்டில் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.