சாமை அரிசி பொங்கல்



என்னென்ன தேவை?

சாமை அரிசி - 500 கிராம்,
சிறுபருப்பு - 200 கிராம்,
தண்ணீர் - 3 லிட்டர்,
உப்பு - தேவைக்கு,
மஞ்சள் தூள் - 1½ டீஸ்பூன்,
எண்ணெய் - 100 கிராம்,
நெய் - 100 மி.லி.,
கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
நறுக்கிய இஞ்சி - 15 கிராம் முந்திரிப்பருப்பு - 100 கிராம்,
மிளகு - 20 கிராம்,
சீரகம் - 20 கிராம்,
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சாமை அரிசியை கழுவி வடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சிறுபருப்பை சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் சாமை அரிசியை சேர்க்கவும். பின் உப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கல் பதத்திற்கு வரும் வரை 15 நிமிடம் மூடி வேக விடவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி, சீரகம், மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டி கலந்து சூடாக பரிமாறவும்.