தினை இடியாப்பம்



என்னென்ன தேவை?

மாவு செய்ய...

தினை மாவு - 250 கிராம்,
வெந்நீர் - 300 மி.லி.,
உப்பு - 2 டீஸ்பூன்,
அரிசி மாவு - 100 கிராம்.

தேங்காய்ப்பால் செய்ய...

முழு தேங்காய் - 1 (துருவியது),
ஏலக்காய்த்தூள் - 20 கிராம்,
கருப்பட்டி - 100 கிராம்.

எப்படிச் செய்வது?

தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், கருப்பட்டி அனைத்தையும் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தினை மாவு, அரிசி மாவு, உப்பு, வெந்நீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, இட்லி பானையில் 2 முதல் 3 நிமிடம் வரை வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய்ப் பாலுடன் பரிமாறவும்.