கம்பு பாயசம்



என்னென்ன தேவை?

கம்பு மாவு - 1 கப்,
தண்ணீர் - 4 கப்,
பால் - 2 லிட்டர்,
பனங்கற்கண்டு - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - 10 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரி - 50 கிராம்,
திராட்சை - 25 கிராம்,
தேங்காய்த்துருவல் - 20 கிராம்.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான கடாயில் கம்பு மாவை தண்ணீர் விட்டு கரைத்து, மிதமான சூட்டில் கெட்டியாகும் வரை காய்ச்சி இறக்கி ஆறவைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பால், ஏலக்காய்த்தூள், பனங்கற்கண்டு, கம்பு மாவு கலவையை சேர்த்து கிளறி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய்த்துருவல் ேசர்த்து இறக்கவும். வறுத்த முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.