கம்பு காராசேவ்



என்னென்ன தேவை?

கம்பு மாவு - 50 கிராம்,
கடலை மாவு - 50 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
மிளகு - 25 கிராம் (பொடிக்கவும்),
பெருங்காயத்தூள் - சிறிது,
பொரிக்க எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு,
ெவண்ணெய் - 30 கிராம்,
சீரகம் - 30 கிராம்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, கடலை மாவு, அரிசி மாவு, பொடித்த மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து, மாவினை ஜல்லிக் கரண்டியால் காராசேவாக தேய்த்து பொரித்து எடுக்கவும்.