ப்ரியங்களுடன்...



*தொப்பி வாப்பா பிரியாணி நிறுவனம் சுவையான பிரியாணி தருவதுடன் அல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை தரும் தொண்டு நிறுவனமாக செயல்படுவது பாராட்டுக்குரியது!
- ஏ.எஸ்.ராஜா, சென்னை.

*ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்  என்ற  குறளுக்கேற்ப சதுரங்க விளையாட்டை உலக அரங்கில் உயர்த்திய பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமியின் பேட்டி பிரமிக்க வைத்துவிட்டது. தீப ஒளி ஜோதியே சரணம்! என்ற பரவசமூட்டும் தலைப்பில் குருவாயூர்  கிருஷ்ணன் ஆலயத்தில் நிகழ்த்தப்படும் விளக்கு பூஜை பற்றி வியப்பூட்டும் வண்ணம் விளக்கிய கட்டுரை வெகு அற்புதம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

*அரக்குப் பூச்சி வளர்ப்பு முறையில் அதிக லாபம் சம்பாதிப்பது எப்படி? என்பது குறித்து அனைத்து விவரங்களையும் முழுமையாக வழங்கியிருந்தார் வேளாண் விஞ்ஞானி டாக்டர் முத்துக்குமார்.
- செ.ேசானிகா, கரூர்.

*நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் பெஞ்ச் மெஸ் குறித்து குப்பண்ணா சார்பு நிறுவனத்தின் மூர்த்தி வழங்கிய விவரங்கள் அவரது சேவையை விளக்கியது.
- அ. செல்வராஜ், கரூர்.

*விதைகளை அன்பளிப்பாய் வழங்கும் பவன் குமாரின் முயற்சி புதுமை. இனாமாகப் பெற்றவர்களை தோட்டக் கலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். மனிதர்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நல்ல முயற்சி.
- ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

*என் குழந்தைகள் என்னை வாழ வைத்தார்கள் என்று அம்மா ஆர்த்தி கூறுவதை கேட்க பெருமையாக இருக்கிறது. சாவின் விளிம்புக்கு சென்று திரும்பி வந்தவர் என்று கூறினால் மிகையாகாது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் எல்லா விஷயத்திலும் ஜெயிக்கலாம் என்பதற்கு ஓர் உதாரணம் ஆர்த்தி. துயர சம்பவம் ஏற்பட்டால் அதை விதி
என்கிறோம். அதை மதியால் வென்றேன் என்று கூறினார் பாருங்கள் அதுதான் ரியலி தி கிரேட்!
- வண்ணை கணேசன், சென்னை.

*உணவுகளை பாரம்பரிய முறையில் பதப்படுத்தி ஊறுகாய், ஜாம் வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் ‘காயத்ரி’யின் முயற்சி முன்னுதாரணமாக உள்ளது.
- எஸ். வளர்மதி, கன்னியாகுமரி.

*இனிப்பு வகைகளை நகைப்பெட்டிக்குள் போட்டு கொடுப்பதால் சாப்பிடும் இனிப்புக்கு மதிப்பு அதிகம் ஏற்படும்.
- எஸ்.ஏஞ்சலின், சென்னை.

அட்டைப்படம்: இந்து, படம்: ஆ.வின்சென்ட்பால்