ஓய்வு காலங்களில் மறக்க முடியாத பயணங்கள்!



படிப்பு, வேலை, திருமணம், குடும்பம், குழந்தைகள், அவர்களின் வாழ்க்கை, பேரன் பேத்திகள் என்றே பெரும்பாலான பெற்ேறார்களின் வாழ்க்கை கழிந்துவிடுகிறது. ஆனால் அவர்களுக்கும் ஓய்வு அவசியம் என்பது ஃபேர்போர்டல் பயண நிறுவனம் புரிந்து கொண்டு, அவர்களுக்கான பாதுகாப்பான பயணத் திட்டங்களை எவ்வாறு வழி வகுக்கலாம் என்று டிப்ஸ் அளிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஒரு கப்பல் பயணம்... கப்பலில் பயணம் செய்வது கொஞ்சம் சலிப்பினை ஏற்படுத்தினாலும், குறைந்த தூரம் பயணம் செய்யக்கூடிய ஊர்களுக்கு கப்பலில் பயணங்களை மேற்கொள்ளலாம். இப்போது இலங்கை, கொச்சி மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு நாம் கப்பலில் பயணம் செய்யலாம்.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்பினால், அதற்கான கப்பல் வசதிகளும் உள்ளன. உலகம் முழுவதும் பயணம் செய்ய விரும்பினால், மூன்று மாதங்கள் உங்களின் பயணம் நீளும். அந்த உல்லாசப் பயணம் நேரம் கிடைக்கும் போது மட்டுமே செய்யமுடியும் என்பதால், அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று உங்களின் வாழ்க்கையினை அழகாக்கலாம்.

சாலைப் பயணம்...

ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல சாலை வழியாகவும் பயணம் மேற்கொள்ளலாம். குறிப்பா கடற்கரை சார்ந்த நகரங்களுக்கு செல்லும் போது கடற்கரை சாலை வழியாகவே உங்களின் பயணத்தினை மேற்கொள்ளலாம். இதன் மூலம் செல்லும் வழியில் பலவித அனுபவங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணம் மேற்கொள்ளும் போது உங்களுக்கு சொந்தமான காரினை நீங்களே ஓட்டிச் செல்லலாம். அல்லது வாடகைக்கும் வாகனங்கள் உள்ளன.

ரயில் பயணம்...

பயணத்திலேயே பாதி நேரத்தை வீணாக்க வேண்டாம். மேலும் உடல் அசதியினை தவிர்க்க ரயில் பயணம் மிகவும் சிறந்தது. நாம் செல்ல இருக்கும் இடத்திற்கு உடனடியாகவும் மிகவும் வசதியாகவும் நம்மை அழைத்துச் செல்லும் ஒரே வாகனம் ரயில். ஊட்டி செல்ல விரும்பினால் அங்குள்ள மலை ரயிலில் பயணம் செய்யலாம். இதனால் வழி நெடுக்க உள்ள இயற்கை காட்சிகளை ரசித்தபடியே உங்களின் பயணம் ஒரு காவியமாக அமையும்.

திரில்லிங் பயணம்...

திரில்லிங் பயணங்களுக்கு காடுகள் மற்றும் வனப்பகுதி அமைந்துள்ள பகுதிக்கு செல்லலாம். இங்கு வனத்தில் உள்ள விலங்குகளை ரசிக்க தனிப்பட்ட வாகனங்கள் உள்ளன. அது உங்களை காட்டிற்குள் மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்லும். நாம் எதிர்பார்க்காத தருணத்தில் காட்டு விலங்குகளைப் பார்க்கும் போது மனசுக்குள் திரிலிங்கான அனுபவங்களை உணர முடியும்.

கோடைகாலப் பயணம்...

இந்தியாவில் கோடை காலம் என்றாலே ெநருப்பினை உமிழும் காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, குன்னூர் போன்ற மலைப் பிரதேசங்கள்தான் சிறந்தது. அந்த சமயத்தில்தான் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே சமயம் நாம் நமக்கான நேரத்தினை எவ்வாறு மகிழ்ச்சியாக கழிக்கிறோம் என்பது தான் நம் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத தருணமாக அமையும்.

ரிதி