* காலையில் கண் விழித்ததும் முதலில் செய்வது?
என் பொண்ணு முகத்தை பார்க்கறது.
அப்போதான் அன்றைய நாளே ரொம்ப உற்சாகமா இருக்கும்.
* உங்களை முதன்முதலாக மிக அழகாக புகைப்படம் எடுத்தவர் யார்?
என் அண்ணனோட ஃப்ரெண்ட் ஸ்ரீதர். சின்ன வயசுல எடுத்த படம். நான் ரொம்ப க்யூட்டா இருக்கும் படங்கள்ல அதுவும் ஒண்ணு.
* உங்கள் துறை சார்ந்த மனதுக்கினிய தோழமை யார்?
நடிகர் ஜீவா.
* ஒரு நாட்டுக்கு ராணியாகும் வாய்ப்பு வந்தால் எந்த நாட்டுக்கு ராணியாக விருப்பம்? பதவி ஏற்றதும் உங்கள் முதல் அறிவிப்பு?
தமிழ்நாட்டுக்குத்தான் என்னோட சாய்ஸ். ஊழலை ஒழிக்கணும் என்பதுதான் என்னோட முதல் கட்டளையா இருக்கும்.
* போட்டோகிராபியில் ஆர்வம் உண்டா? அப்படி என்றால் அதிகமாக க்ளிக் செய்கிற விஷயம்?
போட்டோகிராபி ரொம்பப் பிடிக்கும். முன்னாடி எல்லாம் என்னை நானே கேமராவுல போட்டோ எடுத்துப்பேன். இப்போ என் பொண்ணு ஷிவ்ஹியாதான் என் கேமராவுக்கு அதிகம் போஸ் கொடுக்குறா.
* தினமும் ராசி பலன் பார்க்கும் பழக்கம் இருக்கா?
ராசி பலனா, நானா?! சான்ஸே இல்லை.
* சின்னப்பிள்ளையாவே இருந்திருக்கலாம்னு எப்பவாச்சும் நினைச்சதுண்டா?
சின்ன வயசுல, ‘எப்படா பெரியவளா ஆவோம்’னு நினைச்சிருக்கேன். அதுதான் இப்பவும் எனக்குப் பிடிச்சிருக்கு.
* அதிகம் வேண்டிக் கொள்வது இதற்குத்தான் எதற்கு?
உடல் ஊனமானவர்கள், அநாதைக் குழந்தைகள் இந்த உலகத்துல இனி பிறக்கக் கூடாதுன்னு வேண்டிப்பேன்.
* வண்ணத்துப்பூச்சி, தும்பி இதையெல்லாம் பிடிக்கணும்னு தோணியிருக்கா?
உயிர்களை துன்புறுத்துதல் கூடாதுல்ல... அதான் தொட்டுக்கூட பார்த்ததில்லை.
* மின்சார சேமிப்புப் பழக்கம் சங்கீதாவுக்கு உண்டா?
நிறைய்ய... எங்கே பார்த்தாலும் பவர் கட் இருக்குற சிச்சுவேஷன்ல மின்சாரத்தை சேமிக்கலைன்னா கஷ்டம்தானே!
* பிடித்த பழமொழி?
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’.

* உங்களை ஏற்றிவிட்ட ஏணி என யாரை நினைக்கிறீர்கள்?
கங்கை அமரன், பாண்டியராஜன், பாலா. இவங்க மூணு பேரும் இல்லைன்னா இன்னிக்கு சங்கீதா இல்லை.
* நீங்கள் அடுத்தவரிடம் பொறாமைப்படும் விஷயம் எதுவாக இருக்கும்?
சுறுசுறுப்பா இருக்கறவங்களைப் பார்த்தா ரொம்பப் பொறாமைப்படுவேன். பேசிக்கலி... ஐயம் சோம்பேறி!
* அழுகை வந்தால் நினைவுக்கு வரும் முகம்?
கடவுள் முகம். அதுலயும் சிவன் முகத்தை நினைச்சாலே கவலைகள் எல்லாம் கரைஞ்சுடும்.
* ஹாலிவுட் படங்களில் என்றும் உங்கள் நினைவில் நிற்பது?
ஜூலியா ராபர்ட்ஸ் நடித்த ‘பிரெட்டி வுமன்’.
* எப்போது நினைத்தாலும் சட்டென உங்களை புன்னகைக்க வைக்கும் ஒரு விஷயம்?
நான்ஸ்டாப் ஆக காமெடி பண்றதுல க்ரிஷ்ஷை அடிச்சுக்கவே முடியாது.
அவரோட காமெடியை எப்ப நினைச்சாலும் சிரிச்சுடுவேன்.
* எந்த மொழியில் பேசுவது உங்களுக்குப் பிடிக்கும்?
தமிழ்.
* மிக நெருக்கமான தோழியின் செல்லப் பெயர்?
நடிகை மகேஸ்வரி. அவளை செல்லமா ‘மேகி’ன்னு கூப்பிடுவேன்.
* விளையாட்டுக்குக் கூட இப்படி செய்ய மாட்டேன் என நீங்கள் நினைப்பது?
பொய் சொல்ல மாட்டேன்.
* ‘என் வாழ்க்கையின் ரெயின்போ இவங்க’ யார்?
என்னோட அன்பு கணவர் க்ரிஷ், என்னோட பொண்ணு.
தொகுப்பு: எஸ்.பி.வளர்மதி