ப்ரியங்களுடன்





குறைந்த விலை, நிறைந்த பக்கங்கள்... ‘தீபாவளி ஸ்பெஷல்’ மிகுந்த மன நிறைவை அளித்தது. ‘தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் 30’ புதுமை!
 கே.எல்.புனிதவதி, கோவை29., அர்ச்சனா ராமலிங்கம், சென்னை47., ராஜேஸ்வரி ஹரிஹரன்,
திருவனந்தபுரம்., கீதா ராஜன், திருவண்ணாமலை மற்றும் ரமா உதயகுமார், திருச்சி2.

நடிகை சரண்யா கொடுத்து வைத்தவர். இப்படி ஒரு அப்பா கிடைக்க பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர் மற்றும்  பி.வைஷ்ணவி, சென்னை68.

கும்பகோணம் கடப்பா சீக்ரெட் ரெசிபி ஆச்சரியம் அளித்தது. உடனே செய்து பார்த்துவிட்டோம். அருமை!  மாலதி இளங்கோவன், பாபநாசம் மற்றும் குமாரி சுப்பிரம ணியன் திருப்பத்தூர்.

‘பிரபலங்களின் ப்ரியத்துக்குரியவர்கள்’ எங்கள் ப்ரியத்துக்கும் ப்ரியமானவர்கள் ஆகிவிட்டார்கள்!
 ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை16., ராஜிகுருசாமி, சென்னை88., உமா சாய்நாதன், தஞ்சாவூர்1 மற்றும் டி.சங்கீதா ஸ்ரீதர், பெங்களூரு43.

‘செய்திக்குப் பின்னே’ வாசித்ததும் மனம் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டது. குற்றமற்ற பெண்களை கற்கள் எறிந்து கொல்லும் கொடூரம் என்றுதான் மாறுமோ?
 ம.வசந்தா, கச்சிராயபாளையம் மற்றும் ஜெயலட்சுமி சேஷாத்ரி, கும்பகோணம்1.

வளர் இளம் பருவத்தினரின் அவஸ்தை மனதை கஷ்டப்படுத்தியது.
 பெ.சுலோசனா தெய்வேந்திரன், நெய்வேலி.

‘அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் விஞ்ஞானி’ என்ற பெருமை பெற்ற கரோலின் ஹெர்ஷலை பற்றிய தகவல்களைப் படித்து வியந்து போனேன். ‘செல்லப் பிராணி களின் செல்லம்’ சூர்யா புகைப்படம் எடுத்த பிராணிகள் எல்லாம் வெல்லம்.
  ஆர்.செல்வராணி, மயிலாடுதுறை1.

எட்டு சிறுகதைகள் ‘சொல்லடி சிவசக்தி’ என ஒரு நாடகமானது அதிசயம். வாசகியின் 
‘நியூயார்க் பயண அனுபவம்’ ரசிக்க வைத்தது. ‘தோழி நியூஸ் ரூம்’ ஒரு நூலகமே!
 சு.நவீனா தாமு, பொன்னேரி.

‘இனியவை 20’ பகுதியில் இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் பதில்கள் சும்மா நச்!
 இ.டி.ஹேமமாலினி, சென்னை23.

டாக்டர் விஜயகுமார் எனர்ஜி பார், எனர்ஜி ட்ரிங்க்ஸ் பற்றி கூறியிருப்பவை ஓர் அபாய
எச்சரிக்கை.
  கோமதி பழனிச்சாமி, ஆரல்வாய்மொழி.

‘வாழ்க்கையை மாற்றுமா உப்பு மந்திரம்?’ கட்டுரையில், கிராம மக்கள் இன்றைக்கும் மற்றவர்களிடம் இருந்து உப்பை கையால் வாங்க மாட்டார்கள் என்பதற்கு  சொன்ன விளக்கம் உண்மை!
 ஆர்.பிருந்தா இரமணி, மதுரை3 மற்றும் டி.எம்.பானுமதி சென்னை87.

‘ஆரோக்கியப் பெட்டக’த்தில் இடம் பிடித்த தேங்காய், எங்கள் இல்லத்திலும் எப்போதும் முதலிடம் பிடிப்பது. ‘பீட்ரூட் பிரமாதங்கள்’ படங்களே சுவை உணர்வைத் தூண் டின. ‘ஒளிகாட்டி’யில் வஞ்சுளவல்லி ஸ்ரீதரின் வார்த்தைகள் எனக்கு உத்வேகம் தந்தது. ‘இனிய இல்லம்’ ஒவ்வொரு இதழிலும் மெருகேறி வருகிறது. ‘தீபாவளி புதுவ ரவு’ பார்த்து மிரட்சியே ஏற்பட்டு விட்டது. ‘அறிவோம் ஆயிரம்’, ‘செல்லமே...’ அசத்தல் பக்கங்கள். எண்களின் காதலி சகுந்தலா தேவியின் கணிதத் திறமை வியப்பை யும் பெருமிதத்தையும் தந்தது. ‘ஃபேஸ்புக் பரண்’ பகுதியில் காபி குறித்த கருத்து என்னுடைய கருத்தாகவே இருந்தது.    
 எஸ்.வளர்மதி, லெஷ்மிபுரம்.

‘பெண் என்ற அடையாளம் மட்டுமே பொது’ என்று கூறியிருக்கும் அ.வெண்ணிலாவின் கருத்து யோசிக்க வேண்டிய ஒன்று. ‘மனவியல்’ வெகு நுட்பமாக டீன் ஏஜ்  குழந்தைகளின் பிரச்னைகளை அலசுகிறது. எண்ணெய் குளியல் ஏன், எதற்கு போன்ற கேள்விகளுக்கு அருமையாக விளக்கம் கொடுத்திருந்தார் ராஜம் முரளி.
 பி.மேரி, பெரியகுளம்.

‘கல் எனும் கற்காலக் கொடூரம்’ படிக்கப் படிக்க மனம் பதறியது. இந்த காட்டுமிராண்டித்
தனத்தை பல தேசங்கள் ஆதரிக்கவும் செய்வது இன்னும் கொடுமை.
 பானு பெரியதம்பி, சேலம்30 (மின்னஞ்சலில்).