எண்ணக் கோலங்கள்!





கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்.
குற்றம் பார்க்கின்
சுற்றம் இல்லை;
கோலம் பார்க்கின்
துக்கம் இல்லை.
 கல்யாண்ஜி

தமிழ்ப்பெண்களின் வாழ்வு காலை வாசல் தெளித்து கோலம் போடுவதிலேயே தொடங்கியது. கலை மற்றும் பிற அழகியல் விஷயங்களைத் தாண்டியும்... இதில் உடல்  சார்ந்த, மனம் சார்ந்த விஷயங்களும் அடக்கம். முன்னர் ஜீவகாருண்ய அடிப்படையில் அரிசி மாவினாலேயே கோலம் இட்டனர். அதனால், எறும்புகளுக்கான ஈதலுட னேயே ஆரம்பித்தது நம் காலைப்பொழுது. இளங்காலை காற்றில் பெண்களின் கர்ப்பப்பையை மேம்படுத்தும் சங்கதிகள் இருக்கின்றன என்கின்றனர் நம் முன்னோர்.  குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு உடற்பயிற்சியும் கூட. மனதுக்குப் புத்துணர்ச்சியையும் அன்றைய நாளை நல்ல முறையில் ஆரம்பிக்கக்கூடிய உத்வேகத்தை யும் அது தரும்.

இன்னொரு பாதுகாப்பு விஷயம் குறித்தும் பேசினார் சமீபத்தில் நாம் சந்தித்த காவலர் ஒருவர். திருட வருபவர்கள் அந்த வீட்டில் எத்தனை நாட்களாக வாசல் தெளிக்கப் படாமலும் கோலம் போடப்படாமலும் இருக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டே திட்டமிடுகின்றனராம். ஆகவே, இதில் பாதுகாப்பும் அடங்கியிருக்கிறது!
அதோடு, சாணம் ஒரு சிறந்த கிருமிநாசினியும் கூட. வீட்டினுள்ளே நுழையத் தயாராகும் கிருமிகளை வெளிவாசலிலேயே ஃபில்ட்டர் செய்து விடுகிறது. தெளிக்கப்படும்  இந்த சாணிக் கரைசலானது சுத்தத்துக்கு சுத்தம்  அழகுக்கு அழகு  உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சி  கூடவே பாதுகாப்புக்கு பாதுகாப்பு!
சமீபகாலமாக சில பகுதிகளில் செயற்கை சாணப்பொடியின் பயன்பாடு அதிகமாக இருப்பதைப் பார்க்கிறேன். இதனைத் தவிர்த்தல் நலம். ஒவ்வாமை மற்றும் சுவாசக்  கோளாறுகள் ஏற்படுவதோடு புற்றுநோய் வாய்ப்புகளும் இதில் உண்டாம். சாணம் கிடைக்காதவர்கள் தண்ணீர் தெளித்தாலே போதுமானது. இதனைக் குறித்து நாம்  இங்கே பேசுவதற்குக் காரணம்... இது வாசலை அழகுபடுத்துகிறதோ இல்லையோ வீட்டின் பிரதான நுழைவாயிலை சுத்தமாக வைத்திருக்கிறது என்பதே!
மதிற்சுவர்களில் இல்லப் பெயர்கள் நமக்கென ஒரு பெயர் இருப்பது போலவே நம் வீட்டுக்கும் பெயர் இருந்தால் நலம் என பலரும் ஆசைப்படுகிறோம். வெளிவாயிற் க தவின் இருபுறமும் உள்ள தூண்களில் வீட்டின் பெயர்களை பொருத்திக் கொள்ளலாம். வீட்டின் தன்மைக்கேற்ப கிரானைட், மரம், பித்தளை, பிளாஸ்டிக், கண்ணாடி என  பல மூலப்பொருட்களில் ஆன பெயர் பலகைகள் கிடைக்கின்றன. தனித்தனி எழுத்துகளாகவும் விற்கிறார்கள். அல்லது நம் தேவைக்கேற்பவும் செய்து தருகிறார்கள். கிரா னைட் கற்களில் பொறிக்கும்போது நீங்களே உங்களது கைப்பட வீட்டின் பெயரை எழுதிக் கொடுக்கவும் இயலும். உங்கள் கையெழுத்திலேயே அமைந்த உங்களது வீட் டின் பெயர் ஒரு கூடுதல் அழகியல் அம்சம்தானே!
வீடு கட்டுவதையும் அலங்கரிப்பதையும் பொறுத்த வரை மிகச்சிறிய விஷயங்களிலும் உங்களது உழைப்பும் கைவண்ணமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  ஏனெனில், வீடென்பது தலைமுறைகளையும் தாண்டி நிற்கும் ஒரு அம்சம். உங்களது பேரக்குழந்தைகளும் நாளை சொல்லி மகிழ்வார்களே... ‘இது என் தாத்தா   பாட்டி கைபட எழுதியது’ என!
இத்தகைய ஏற்பாடுகளை அடுக்கக வீடுகளிலும் (ஃப்ளாட்ஸ்) செய்யலாம். இதற்கென்றே பிரத்தியேக பெயர்ப் பலகைகள் கிடைக்கின்றன... சுவரில் மாட்டிக்கொள்ளும்  வகையிலும் கதவில் மாட்டிக் கொள்ளும் வகையிலும்! சுவரில் பொருத்தப்பட்ட கிரில்களில் மாட்டிக் கொள்ளும் வகையிலும் இவை வருகின்றன.

மதிற்சுவரின் உள்ளே தோட்டப் பகுதியில்...
இனிய இல்லம் பகுதியில் பசுமை வீடுகள் (ரீக்ஷீமீமீஸீ லீஷீனீமீs) என்ற அடிப்படையிலேயே நாம் திட்டமிடுவதால், மறுசுழற்சி முறைகளைக் குறித்தும், மாற்றுப் பயன் பாட்டு முறைகள் குறித்தும் சிந்திப்பது அவசியம். இதன் தொடர்ச்சியாகவே வீடுகளின் வெளிப்பகுதிகளில் அல்லது தோட்டப் பகுதிகளில் உரக்குழி அமைப்பது குறித்தும்  பேச வேண்டும். உரக்குழி அமைப்பது குறித்து ‘குங்குமம் தோழி’ வாசகி தீபா ராம் தான் திரட்டிய தகவல்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். இது படிப்பதற்கு மட்டு மல்ல... நடைமுறைப்படுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம்!
மிக எளிய முறையில் உரக்குழி

அமைப்பது எப்படி?
உதாரணமாக இரண்டு மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்க வேண்டும். இரு மரங்களுக்கு நடுவே இருக்கும்  இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக் கூட்டிக் கொள்ளலாம்.



குழிகளில் தேவையற்ற வாழை(இலை,தண்டு) மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம்.  வேப்ப இலை சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது.

இப்படி இலை, சருகுகள், காய்கறி, பழக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள்(எரு முதலியவை) மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை மட்டைகளை படுக்கை வரிசையில் அடுக்க வேண்டும். உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப்  பொருட்கள், மண்ணோடு மண்ணாக அழுந்த ஆரம்பித்ததும், மட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அழுத்த வேண்டும்.

மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துகளை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும். மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை  உரம் இதிலிருந்து கிடைத்து விடும். சில மாதங்கள் கழித்து கிளறிப் பார்த்தால் மண்புழுக்கள் நிறைந்திருக்கும். தொட்டிச் செடிகளுக்கு தேவையான உரத்தையும் இங்கி ருந்தே எடுத்துக்கொள்ளலாம்.
(பழகுவோம்... படைப்போம்!)

எத்தனை நாட்களாக வாசல் தெளிக்கப்படாமலும் கோலம் போடப்படாமலும் இருக்கிறது என்பதைக் கணக்கில் கொண்டே திருடர்கள்  திட்டமிடுகின்றனராம்!

கோலம் ஒரு வரைகலை!
தமிழர்களின் வாழ்வையும் வாசலையும்
அலங்கரிக்கும் ஒரு கவின்கலை...
பழங்குடிகளின் வழிபாட்டில் தரை என்பதே முதல் புனிதப்பொருள். தரையை தன் முதல் கடவுளாகவே அவர்கள் கருதினார்கள். அதுவும் தெய்வம் முதல் காலடி எடுத்து  வைத்து தன் வீட்டுக்குள் நுழையும் முற்றம் புனிதப்படுத்தப்பட வேண்டிய ஒன்றெனவும் அவர்கள் கருதியிருக்கலாம். கோலம் என்பது தண்ணீரோ பசுஞ்சாணமோ  தெளித்து சுத்தப்படுத்தப்பட்ட தரைக்கு செய்யும் ஒப்பனை. அரிசி மாவை கரைத்து துணியில் கட்டி தரையில் கோடு கிழிப்பதில் இயற்கையோடு இணைந்த வாழ்வும்,  எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு உணவளிக்கும் நோக்கமும் உள்ளடக்கம்!
(ஊலலல்லா வலைப்பூவிலிருந்து... மீஸீsணீஸீtலீஷீsலீ.ஷ்ஷீக்ஷீபீஜீக்ஷீமீss.நீஷீனீ)