பரியங்களுடன்…



*வங்கியில் கணக்கு துவங்கும் முன் பின்பற்ற வேண்டியது, சேமிப்பை ஊக்குவிக்கவும், சேமிப்பில் நமக்கு கிடைக்கும் பயன்கள், எதிர்கால சேமிப்பு பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- வசந்தா, சென்னை.

*‘படித்தால் தான் சாதிக்க முடியும்’ என்ற எண்ணத்தை மாற்றி, படிப்பு இல்லாவிட்டாலும், படிக்க முடியாத சூழலிலும் வாழ்க்கையைச் செம்மையாக நடத்தலாம் என்ற அடிப்படைத் தன்னம்பிக்கையுடன் செயல்படும் ஜெயக்கொடி, வெற்றிக் கொடியை நிச்சயம் நாட்டுவார் என்பது உறுதி.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

*ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பலகாரம், இதனால் ஸ்பெஷல் என்று யோசித்தபோது, கோவில்பட்டி முறுக்கு தயாரிப்பை விளக்கிய விதத்தில், அதன் அர்த்தம் புரிந்தது.
- அ.யாழினி பர்வதம், சென்னை.

*சாதாரண சில்வர் பேப்பரில் உணவுப் பொருட்களை வழங்கும் இந்த நாளில், ஹாட்பேக்கில் உணவுப் பொருட்களை தரும் சிவகாமி தேவநாதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அது மட்டுமல்ல உணவுப் பொருட்களின் ருசியே  சூடாக சாப்பாட்டில் இருக்கிறது. அதை தருவது ஈடு இணையில்லாதது.
- வண்ணை கணேசன், சென்னை.

*“கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் ‘மகாலட்சுமி கோயில்’ பற்றிய கட்டுரை ‘தோழி’யில் இடம் பெற்றிருப்பது ‘இரட்டிப்பு மகிழ்ச்சி’!
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

*சென்ற தோழி ருசியோ ருசி. கூட பீமா ஊறுகாயின் டேஸ்ட் வேறு. தோழியுடன் ‘30 ரூபாய் மதிப்பிலான’ கிஃப்ட் கொடுத்து அசத்தி விட்டடீர்!
- எஸ்.இப்ரானு, சென்னை.

*தயிர் தகவல்கள் மிக அருமை. கிச்சன் டிப்ஸ் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. எனது டைரியில் தொடர்ந்து ஒட்டி வருகிறேன். மூட்டு வலியை குணமாக்கும் காராமணி எனது தாயாருக்கு நிச்சயம் உதவக் கூடியது.
- ஜி.தீபிகா, திண்டிவனம்.

*5 வருடங்களுக்கு முன்பு என் அபிமான நடிகை புன்னகை அரிசியின் பேட்டி கண்டு முதன் முதலாக தோழி வாங்கினேன். இப்ேபாது என் ஆசை மற்றும் நடிகை அழகு மங்கை ரமா பிரபா பேட்டிகளை காண புத்தகம் வாங்கினேன். இனி மாதம் தவறாமல் தோழியை காண்பேன்.
- ஏ.கமால்பாஷா, கந்தர பேட்டை.

*தவம் இருந்தாலும் தவறினால் கிடைக்க முடியாத பாசம் அது தாயின் நேசம் என்பதை காசியும் அம்மாவும் என்ற சிறுகதையின் வாயிலாக மேகலா சித்ரவேல் உருக்கமாக எழுதியது மிகவும் அருமையாக உள்ளது.
- டி.சாந்திநடராஜன், கன்னியாகுமரி.

அட்டைப்படம்: லாஸ்லியா, புகைப்படம்: கிரண்ஷா