தோழி சாய்ஸ்



ஸ்டைலிஷ் நகைகள்

டிரெண்டி உலகம், டிரெண்டி வாழ்க்கை என அணியும் தங்க நகைகளிலும் டிரெண்டியாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் இக்காலப் பெண்கள். டிரெண்டி என்றாலே லைட் வெயிட் மேலும் மாடர்ன் உடைகளுக்கும் மேட்சிங்கான நகைகளாக இருக்க வேண்டும். லைட் வெயிட் நகைகள் என்றாலே ஜுவல் ஒன் நகைகள் என யாவரும் அறிந்ததே. எப்போதுமே டிரெண்டியான நகைகளைக் கொடுக்கும் ஜுவல் ஒன் இப்போது என்ன டிரெண்ட் கொண்டு வந்திருக்கிறார்கள்.

‘‘மொத்தம் 15 மெயின் கிளைகள். அதிலே 13 கிளைகள் தமிழ் நாட்டில் இருக்கு. எமரால்ட் ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட். முப்பது வருஷமாக நகை உருவாக்கத்திலே இருக்கும் எங்கள் கம்பெனி அதன் மூலமாகவே ஜுவல் ஒன் லைட் வெயிட் டிரெண்டி நகைகளை வருடம் தோறும் கொடுக்கிறது’’ என்கிறார் சேல்ஸ் ஹெட் அமர்நாத்.

‘‘நாங்களே சொந்தமாக டிசைன் செய்வதால்தான் லைட் வெயிட் மேலும் டிரெண்டி டிசைன் எனக் கொடுக்க முடிகிறது. பெரும்பாலும் தங்க நகைகள், புடவை, சல்வார், போன்ற டிரெடிஷனல் உடைகள் கூட மட்டுமே போட்டுக்க முடியும். வேலைக்கு போகும் போது ஜீன் டாப் அல்லது ஃபார்மல் உடைகளுடனோ அல்லது பார்ட்டி கவுன்கள், காக்டெயில் உடைகள் என அணிய முடியாது.

அந்த டிரெண்டை மனதில் வைத்தே டிரெடிஷனல் நகைகளுடன் மாடர்ன் நகைகளும் டார்கெட் செய்றோம். இப்போ கூட புதுசா ஜியோமெட்ரிக் என்கிற கணக்கு தீம் ஜுவல்கள்தான் சமீபத்திய தீம். வட்டம், முக்கோணம், அறுங்கோணம் என வடிவங்களை மையமா வெச்சு புது கலெக்‌ஷன்கள் கொண்டு வந்திருக்கோம். ஆபீஸ், நண்பர்கள் சந்திப்பு இப்படி என சிம்பிள் நகைகளாக அணிய ஆசைப்படும் பெண்களை டார்கெட் செய்தே நிறைய கலெக்‌ஷன்கள் உள்ளது. நெக்லெஸ், மோதிரம், தோடு, பிரேஸ்லெட் என அனைத்தும் ஒரு பவுனில் கூட இங்கு வாங்கலாம்.

நவராத்திரி ஸ்பெஷல் கலெக் ஷன்ஸ்

என்னதான் தீம், டிரெண்டி கல்யாணங்கள் என்றாலும், அதிலும் சில பழக்க வழக்கங்களை ஒவ்வொர் குடும்பமும் கடைபிடிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பில் குடை, செருப்பு கொடுத்து அழைத்து வருவது, மாப்பிள்ளை பெண்ணின் தங்கைக்கு உடைகள் கொடுப்பது, இதெல்லாம் இன்றும் பழங்கால வாசம் மாறாமல் கடைப்பிடிக்கப்பட்டுதான் வருகிறது. அதை மையமாக வைத்தே திருமணத்திற்கு தேவையான ஆரத்தி தட்டுகள், காசியாத்திரை செட், பச்சபுடி செட், விளையாடல் செட் என அனைத்தையும் விற்பனை செய்கிறார்கள் ஜேபீ கிரியேஷன்ஸ் (JayBee Creations).

‘இப்போ நவராத்திரி ஸ்பெஷல் கலெக்‌ஷன்ஸ்தான் சிறப்பாக களமிறக்கியிருக்கிறோம்’  என்னும் ஜேபீ கிரியேஷன்ஸ் உரிமையாளர் ஜெயஸ்ரீ சமீபத்திய டிரெண்ட் குறித்து பேசினார். நவராத்திரி ஸ்பெஷலாக கற்கள் பதித்த ஆரத்தி தட்டுகள், குங்குமம், மஞ்சள் வைப்பதற்கு ஹேண்டி கிராஃப்ட் கப்புகள், எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளக் கூடிய கோலங்கள், கீ செயின்கள் என பல வெரைட்டிகள் கொண்டு வந்திருக்கோம்.

குறிப்பாக கோலங்களை அலங்கரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கார்டுகள் போல் எங்கும் வைத்துக்கொள்ளலாம் பாணியில் இருக்கும். அதே போல் தீபாவளி சிறப்பாக எலெக்ட்ரிக் லைட்டுகள் பொருத்தப்பட்ட விளக்குகள் அதிலேயே நிறைய ஹேண்ட்மேட் டெக்ரேஷன்கள் சகிதமாக இறக்கியிருக்கிறோம்.

நவராத்திரி கீ செயின்கள் எங்களின் அடுத்த வரவு. விநாயகர், லஷ்மி என கடவுள்களின் சிலைகள் தாங்கிய இந்தக் கீ செயின்களை தோரணமாக, அன்பளிப்பாக, காரில் கண்ணாடியுடன் அலங்காரமாக, சாவிகளில் என எப்படியும் உபயோகிக்கலாம். மேலும் விருந்தினர்களுக்கு பழம், பாக்குடன் இந்தக் கீ செயின்களையும் சேர்த்துக் கொடுத்தால் மறக்க முடியாத அன்பளிப்பாக இருக்கும்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்